கற்றல், தியானம் மற்றும் உத்வேகத்திற்கான உங்கள் டிஜிட்டல் ஆன்மீகத் துணை
உங்கள் ஆன்மீகப் பயணத்திற்கு உதவக்கூடிய ஒரு டிஜிட்டல் வளம்
ஆன்மீக உன்னத இலக்கியம், ஒரு யோகியின் சுயசரிதம் நூலின் ஆசிரியரான பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் மூலம் ஆன்மாவின் அமைதி, பேரின்பம் மற்றும் ஞானம் ஆகியவற்றின் வாழ்க்கையை-மாற்றும் விழிப்புணர்வை உணருங்கள்.
SRF/YSS செயலி அனைவருக்கும் ஆனது — நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு முற்றிலும் புதியவராக இருந்தாலும் சரி, அல்லது பல வருடங்களாக இந்த மகத்தான குருவின் ஞானத்தில் ஆழ்ந்திருப்பவராக இருந்தாலும் சரி, இந்தச் செயலி உங்களுக்கானது. தியானம், கிரியா யோக விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக ரீதியில் சமநிலை வாழ்க்கை வாழ்வதற்கான நடைமுறை வழிகள் குறித்து மேலும் அறிய விரும்பும் எவருக்கும் இது உரியது.
இதில் இடம்பெறுபவை:
- அமைதி, பயமின்றி வாழ்தல், ஒளியாக இறைவன், உணர்வுநிலையின் விரிவாக்கம் மற்றும் பல தலைப்புகளில் வழி நடத்தப்படும் தியானங்கள் — 15 முதல் 45 நிமிடங்கள் வரை மாற்றியமைக்கக்கூடிய தியான நேரங்களுடன்.
- நேரடி ஆன்லைன் தியானங்களுக்கு இலவச அணுகல்
- YSS/SRF செய்தி மற்றும் நிகழ்வுகள் குறித்த தகவல்
YSS/SRF பாட மாணவர்களுக்கு…
இந்தப் செயலியில் உங்கள் பாடங்களின் டிஜிட்டல் வடிவங்களும், YSS/SRF கிரியா யோகப் போதனைகளை உங்கள் அன்றாட வாழ்வில் நீங்கள் செயல்படுத்த உதவக்கூடிய பலதரப்பட்ட மல்டிமீடியா உள்ளடக்கங்களும் அடங்கியுள்ளன.
பின்வருவன உட்பட:
- பரமஹம்ஸ யோகானந்தரின் ஒலிப்பதிவுகள்
- YSS/SRF சன்னியாசிகளால் நடத்தப்படும் வழிநடத்தப்பட்ட தியானங்கள் மற்றும் மனக் காட்சி காணும் பயிற்சிகள்
- YSS/SRF தியான உத்திகள் குறித்த வகுப்புகள்
- YSS/SRF சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் படிபடியான வீடியோ அறிவுறுத்தல்கள்
நீங்கள் ஒரு YSS/SRF பாட மாணவராக இருந்தால், செயலியில் பாடங்களை அணுக உங்களது சரிபார்க்கப்பட்ட பக்தர் போர்டல் கணக்குத் தகவலைப் பயன்படுத்துங்கள்.
YSS/SRF பற்றி
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) மற்றும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (SRF) அமைப்புகள் வாழ்வை-மாற்றும் ஆன்மா வை உணர்ந்தறிதலில் ஒன்றாகப் பயணிக்க ஆன்மீக சாதகருக்கு விடுக்கப்படும் ஒரு அழைப்பாகும். இந்தப் பயணம் பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகளைத் தழுவியுள்ளது; அவை நாம் உண்மையில் யார் என்பதை உணர்ந்தறிவதற்கான மிக உயர்ந்த உத்திகளை உள்ளடக்கியுள்ளன, மேலும் நமது வாழ்விலும் உலகிலும் நீடித்த அமைதி, பேரானந்தம் மற்றும் அன்பை எவ்வாறு கொண்டு வருவது என்பதைக் காட்டுகின்றன. YSS மற்றும் SRF-இன் குறிக்கோள், ஒரு தத்துவார்த்த படிப்பை மட்டும் வழங்குவதன்று, மாறாக நவீன யுகத்தின் சிறந்த ஆன்மீக குருமார்களில் ஒருவரின் ஜீவ சொற்கள் மூலம் புனித அறிவை உண்மையான பரிமாற்றம் செய்வதாகும்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா 1917 இல் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது. கிரியா யோக போதனைகளை உலகம் முழுவதும் பரப்புவதற்காக, ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் 1920 இல் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்டது.
SRF/YSS செயலியின் முக்கிய அம்சங்கள்
YSS பாட மாணவர்கள் தங்கள் பக்தர் இணைய தள உள்நுழைவுச் சான்றுகளைப் பயன்படுத்தி SRF/YSS செயலியில் உள்நுழைந்து, தாங்கள் சந்தா செலுத்தியுள்ள மொழி(களில்) பாடங்களை அணுக முடியும். பாடங்கள் பயிலும் மாணவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அனைத்துப் பயனர்களும் ஆன்லைன் தியானங்கள், வழி நடத்தப்படும் தியானங்கள் மற்றும் YSS செய்திகள் மற்றும் வலைப்பதிவு இடுகைகள் போன்ற பிற டிஜிட்டல் வளங்களை அணுகலாம்.
பாடங்களின் டிஜிட்டல் வடிவம் ஒரு கூடுதல் வளமாக வழங்கப்படுகிறதே தவிர, அச்சு வடிவிலான பாடங்களுக்கு மாற்றாக அல்ல. அச்சுப் பிரதியுடன் சேர்த்து, இந்த டிஜிட்டல் வடிவப் பாடங்களை விவேகத்துடன் பயன்படுத்தும்போது, அது மாணவர்களுக்குப் பல நன்மைகளை அளிக்கிறது. YSS பாடங்களில் உள்ளார்ந்து இருக்கும் உண்மைகளையும் தெய்வீக உணர்வுநிலையையும் நீங்கள் படித்து, உள்வாங்கி, அவற்றால் ஆன்மீக ரீதியாக மாற்றமடையச் சிறந்த அணுகு முறையைத் விவேகத்துடன் தேர்ந்தெடுக்க உங்களை ஊக்குவிக்கிறோம்.
செயலியின் சில முக்கிய அம்சங்கள்:
- பல மேம்பாடுகளைக் கொண்ட நம் புதிய இ-ரீடர் மூலம் பாடங்களைப் படியுங்கள்: எழுத்தை ஒலியாக மாற்றும் வசதி, அகலவாக்கில் படிக்கும் வசதி, பல்வேறு ஹைலைட் வண்ணங்கள், சொல் தேடல்கள், ஃபிளாஷ் கார்டு உருவாக்கம் மற்றும் பல!
- உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்களுக்கான வழிகாட்டுதலை எளிதாகப் பெறுவதற்கு, தலைப்பு வாரியாக துணைப் பாடங்களை ப்ரவுஸ் செய்யுங்கள்.
- study.staging4.yssofindia.org இல் உள்ள எங்கள் டெஸ்க்டாப் ப்ரவுஸர் ரீடரைப் பயன்படுத்துங்கள்; அது மொபைல் செயலியிலியிருந்து உங்கள் வாசிப்பு இடம், புக்மார்க்குகள் மற்றும் ஹைலைட்டுகளுடன் தானாகவே ஒத்திசைந்துகொள்ளும்.
- YSS-இன் சமீபத்திய செய்திகள் மற்றும் வலைப்பதிவுகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்.
- செயலியிலிருந்தே தினசரி ஆன்லைன் தியானங்களில் கலந்துகொள்ளுங்கள்.
- பல்வேறு தலைப்புகளில் வழி நடத்தப்படும் தியான அனுபவங்களைப் பெறுங்கள், இப்போது உங்கள் கால அட்டவணைக்கு ஏற்ப பல்வேறு கால அளவிலும் வழங்கப்படுகின்றன.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள்
கீழே உள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) குறிப்பாக ஒய் எஸ் எஸ் செயலியுடன் தொடர்புடையது. நீங்கள் ஒய் எஸ் எஸ் மற்றும் இந்த போதனைகளுக்கான பொதுவான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைத் தேடுகிறீர்களானால், தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
உகந்த சாதனங்கள் மற்றும் மொழிகள்
எந்த வகையான சாதனங்கள் ஆதரிக்கப்படுகின்றன?
இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் பாடங்கள் டெஸ்க்டாப் உலாவிகளிலும் (browsers) கிடைக்கின்றன.
- ஆண்ட்ராய்டு செயலிக்குத் தேவைப்படுபவை:
- அண்ட்ராய்டு பதிப்பு 7.0 மற்றும் அதற்கு மேல்
- கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே சேவைகள் நிறுவப்பட்ட சாதனம்
- iOS செயலிக்குத் தேவைப்படுபவை:
- iOS பதிப்பு 17.4 மற்றும் அதற்கு மேல்
- டெஸ்க்டாப் உலாவி (browser) தேவைகள்:
- அனைத்து முக்கிய உலாவிகளும் (browsers): க்ரோம், சஃபாரி, ஃபைர்ஃபாக்ஸ், மைக்ரோஎட்ஜ் (Chrome, Safari, Firefox, Microsoft Edge)
இந்த பின்வரும் சாதனங்கள் தற்சமயம் ஆதரிக்கப்படவில்லை:
- அமேசான் ஃபயர் டேப்லெட்டுகள்
- அண்ட்ராய்டு இன்ஸ்டன்ட் செயலிகள்
- கூகுள் க்ரோம் புக் செயலிகள்
எனது கணினி அல்லது விண்டோஸ் சாதனத்தில் பாடங்களைப் படிக்க முடியுமா?
ஆம்! மாணவர்கள் இப்போது study.staging4.yssofindia.org சென்று தங்கள் பக்தர் இணைய முகப்பு சான்றுகளுடன் உள்நுழைவதன் மூலம் தங்கள் பாடங்களை கணினியில் அணுகலாம்.
எந்தெந்த மொழிகள் ஆதரிக்கப்படுகின்றன?
செயலி மொழி: SRF/YSS செயலி தற்போது ஆங்கிலம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கிடைக்கிறது. யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் நீங்கள் விரும்பிய மொழியில் பாடங்கள் அல்லாத அனைத்து உள்ளடக்கத்தையும் காண, ‘சுய விவரம்’-இல் ‘செயலியின் மொழி’ -ஐத் தேர்ந்தெடுக்கவும். பாடங்கள் அல்லாத உள்ளடக்கத்தில் செய்தி இடுகைகள், மொழி சார்ந்த ஆன்லைன் தியானங்கள் குறித்த அட்டவணைகள், வழிநடத்தப்பட்ட தியானங்கள், வாராந்திர சொற்பொழிவுகள், கீதை உரைகள், சங்கம் மற்றும் SRF பேரவை சொற்பொழிவுகள் ஆகியவை உள்ளன.
பாட மொழி: செயலியில் YSS பாடங்கள் தற்போது ஆங்கிலம் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வழங்கப்படுகின்றன. எந்தவொரு மொழியிலும் அணுக, ஒருவர் முதலில் ஒரு பாட மாணவராக சேர வேண்டும் (மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்). ‘சுய விவரம்’ என்ற பகுதிக்குச் சென்று, ‘பாட மொழி’-ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பாட மொழியை செயலியில் மாற்றலாம்.
பாடங்கள் சந்தாக்கள், உள்நுழைதல் மற்றும் கெஸ்ட் மோட்
செயலியில் எனது பாடங்களை என்னால் அணுக முடியவில்லை. ஏன்?
- உள்நுழைவதற்கும் உள்ளடக்கத்தை அணுகுவதற்கும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் அணுக முயற்சிக்கும் குறிப்பிட்ட தொடருக்கு நீங்கள் பதிவுசெய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்படைத் தொடர்கள் மற்றும் துணைப் பாடத் தொடர்களுக்கு தனித்தனி பதிவுகள் உள்ளன.
- செயலி, பாடங்களின் புதிய பதிப்பிற்கான அணுகலை மட்டுமே வழங்குகிறது. பாடங்களின் புதிய பதிப்பிற்கு நீங்கள் பதியவில்லை என்றால், மேலும் அறிய இங்கே வருகை தரவும்.
- உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உள்நுழைவுத் திரையில் ‘கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?’ (‘Forgot Password?’) என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு இன்னும் சிக்கல் இருந்தால், எங்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள செயலியின் ‘ஃபார் மி (‘For Me’ ) அருகில் உள்ள ‘உதவி’ (support) பொத்தானைப் பயன்படுத்தவும். இது உங்களுக்கு சிறப்பாக உதவ எங்களை அனுமதிக்கும். உங்களால் செயலியை நிறுவ முடியவில்லை எனில், apptechsupport@yogananda-srf.org ஐ மின்னஞ்சல் செய்து உங்கள் சிக்கலை விரிவாக எழுதுங்கள், உங்கள் பெயர் மற்றும் உங்கள் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க நினைவில் கொள்ளுங்கள்.
செயலியில் உள்ள பாடங்களை நான் எப்போது அணுக முடியும்?
செயலியில் ஒரு குறிப்பிட்ட பாடம் இன்னும் கிடைக்கவில்லை என்றால், கிடைக்கும் தேதி காண்பிக்கப்படும்.
நான் ஆங்கிலம் மற்றும் இந்தி (அல்லது தமிழ்/தெலுங்கு) பாடங்களுக்கு பதிவு செய்துள்ளேன், ஆனால் ஆங்கில பாடங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. எனது இந்தி, (அல்லது தமிழ்/தெலுங்கு) பாடங்களை நான் எவ்வாறு அணுகுவது?
பாடங்கள் மொழிப் (anchor) பிரிவைப் பார்க்கவும்.
பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொண்டு சரிசெய்தல்
பாடங்கள் eReader
புக் மார்க்ஸ் மற்றும் சிறப்புகுறிப்பு
4 வெவ்வேறு வண்ணங்களில் சிறப்புகுறிப்பு செய்ய, பாடம் உரையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்டால், செயலி தானாகவே உங்கள் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட வண்ணத்துடன் தேர்வை சிறப்புகுறிப்பு செய்யும். உங்கள் தற்போதைய பாட த்தின் புக்மார்க்குகள் மற்றும் சிறப்புகுறிப்புகள் இன்-ரீடர் மெனுவில் தோன்றும் (மேல் வலதுபுறத்தில் உள்ள மெனு ஐகானைக் கிளிக் செய்யவும்). அனைத்து பாடங்களிலிருந்தும் உங்கள் புக்மார்க்குகள் மற்றும் சிறப்புகுறிப்புளைப் பார்க்க, ‘ஃபார் மி’ பகுதிக்குச் சென்று, ‘புக்மார்க்குகள் மற்றும் சிறப்புகுறிப்பு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பல்வேறு சாதனங்களின் அனைத்து புக்மார்க்குகளும் சிறப்புகுறிப்புகளும் ஒத்திசைக்கப்படும்.
பாடங்கள் துணை சாதனங்களை அணுகுதல் (auxiliary material)
ஒரு குறிப்பிட்ட பாடத்தின் இறங்கும் பக்கத்தில் (Lesson’s landing) உள்ள ‘துணை சாதனங்கள்’ பொத்தானைக் கிளிக் செய்யவும். “கண்ணோட்டம்”, “ ஆன்ம-அனுபூதியின் மூலம் அதி உன்னத சாதனைகள்” (“Highest Achievements Through Self-Realization,”) மற்றும் “முகவுரை” (“Preface.”) ஆகியவற்றில் துணை சாதனங்கள் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாடம் 1 இல் தொடங்கி துணை சாதனங்கள் கிடைக்கப் பெறும்.
வார்த்தை தேடல் ( Word Lookup) (YSS சொல்லகராதி மற்றும் அகராதியிலிருந்து)
ஈ ரீடரில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து, கீழ் மெனுவில் உள்ள ‘மேலும் அறிக’ (‘Learn More’) என்பதைக் கிளிக் செய்யவும். இது YSS சொல்லகராதி மற்றும் ஒரு பொது அகராதி இரண்டிலிருந்தும் ஒரு வரையறையை ஏற்ற முயற்சிக்கும். பல சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேர்வில் உள்ள அனைத்து சொல்லகராதி சொற்களையும் செயலி வழங்கும். அகராதி முடிவுகளுக்கு, ஒரு நேரத்தில் ஒரு வார்த்தையை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
ஃப்ளாஷ்கார்டுகள் (உருவாக்குதல் மற்றும் மறுஆய்வு செய்தல்)
ஃப்ளாஷ்கார்டுகளின் உருவாக்கம் இப்போது புதிய கருத்துகளைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு கருவியாக கிடைக்கிறது. ஃபிளாஷ்கார்டை உருவாக்க, eReader இலிருந்து ஒரு சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும் (இது சொற்றொடரை சிறப்புகுறிப்பு செய்யும்). சிறப்புகுறிப்பு செய்யப்பட்ட பகுதியை மீண்டும் கிளிக் செய்து, கீழ் மெனுவில் உள்ள ‘ஃபிளாஷ் கார்டை உருவாக்கு’ ( Create flashcard) என்பதைக் கிளிக் செய்யவும். இது உங்கள் ஃபிளாஷ்கார்டின் “வரையறையை” அமைக்கிறது. உருவாக்கத்தை முடிக்க ஒரு ‘தலைப்பு’ வழங்கி ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். சேமிக்கப்பட்ட அனைத்து ஃபிளாஷ்கார்டுகளும் செயலியின் ‘ஃபார் மி’ பிரிவில் தோன்றும்.
உரை-இலிருந்து-ஒலி வடிவம் Text-to-speech (TTS) வேலை செய்யவில்லை
இணக்கமான சாதனங்களில் மட்டுமே உரை-இலிருந்து-பேச்சு வடிவம் (TTS) ஆதரிக்கப்படுகிறது. ஆதரவும் மொழிக்கு ஏற்ப மாறுபடும், எடுத்துக்காட்டாக, தமிழில் TTS, iOS இல் ஆதரிக்கப்படுவதில்லை.
சில ஆண்ட்ராய்டு சாதனங்களில் (சாம்சங் சாதனங்கள் போன்றவை), டிஃபால்ட் (அல்லது விருப்பமான, (preferred) பேச்சு வடிவ எஞ்சினை ‘ஸ்பீச் சர்வீசஸ் பை கூகுள்’ என அமைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
டி.டி.எஸ் (TTS) பேசும் குரலை மாற்றுதல்
கேட்கும் பயன்முறையில் இருக்கும்போது, ஆடியோ பிளேயர் மெனுவின் கீழ் இடது மூலையில் உள்ள பேச்சு ஐகானைக் கிளிக் செய்க. இது உங்கள் சாதனத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து குரல்களையும் பட்டியலிடும்.
துணை பாடங்களை தொகுதி (மாட்யூல்) வாரியாக பிரௌஸிங் செய்தல் (அதாவது தலைப்பு)
அடிப்படை பாடம் தொடர் (பாடங்கள் 1-18) முடித்த மாணவர்கள் துணைப் பாடத்தொடருக்கு சேர தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். ‘துணை பாடங்கள்’ டேபை தேர்ந்தெடுத்து, தலைப்பு மூலம் துணை பாடங்களை பிரௌஸ் செய்ய ‘மாட்யூல்ஸ்’ (‘Modules’) என்பதைக் கிளிக் செய்யுங்கள். நீங்கள் சப்ளிமெண்ட் தொடரைத் தொடங்கியவுடன், புதிய பாடங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கிடைக்கப் பெறும்.
ஆன்லைன் தியானங்கள்
நேரடி ஆன்லைன் தியானங்களில் கலந்து கொள்ளுதல்
‘தியானம் | ஆன்லைன் செயலியின் பிரிவில், வரவிருக்கும் தியானங்கள் பட்டியலிடப்படும். திட்டமிடப்பட்ட தொடக்க நேரம் வந்ததும், நீங்கள் ஜூம் அல்லது YouTube வழியாக தியானத்தில் கலந்து கொள்ளலாம். ‘சேரவும்’ ( ‘Join on’) பொத்தானைக் கிளிக் செய்தால், பொருத்தமான செயலியைத் தொடங்கும் (முன் நிறுவல் தேவைப்படுகிறது).
ஆன்லைன் தியான பட்டியலை வடிகட்டுதல்(filter)
நம் ஆன்லைன் தியான மையம் பல்வேறு நிகழ்வு வகைகளை வழங்குகிறது. குறிப்பிட்ட வகைகளைப் பார்ப்பதில் / கலந்து கொள்வதில் மட்டுமே நீங்கள் ஆர்வமாக இருந்தால், மேல் வலதுபுறத்தில் உள்ள ‘ஃபில்டர்’ ஐகானைக் கிளிக் செய்து, காண்பிப்பதில் நீங்கள் ஆர்வமாக உள்ள வகைகளை மட்டுமே பார்வையிடலாம். உங்கள் மாற்றங்களைச் சேமிக்க ‘பயன்படுத்து’ என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
மொழி சார்ந்த ஆன்லைன் தியான அட்டவணைகளைப் பார்த்தல்
செயலியின் மொழி-இல் விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுக்கும்போது, செயலி அந்த மொழி சார்ந்த அதிக நிகழ்வுகளைக் காண்பிக்கும். தற்சமயம் இது இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கிடைக்கப் பெறுகின்றன.
வழிகாட்டப்படும் தியானங்கள்
வழிகாட்டப்படும் தியானங்களை இயக்குதல்
செயலியின் ‘தியானம் |வழிகாட்டுதல்’ (Meditate/Guided’) பிரிவில், நம் சன்னியாசிகள் நடத்தும் வழிகாட்டப்படும் தியானங்களை நீங்கள் பின்பற்றலாம். முதலில் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் தொடங்குவதற்கு விரும்பிய கால அளவைத் தேர்ந்தெடுங்கள். YSS பீடத்தைக் காண, உங்கள் மொபைல் சாதனத்தை லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் திருப்புங்கள்.
வழிகாட்டப்படும் தியானங்களை பதிவிறக்குதல்
ஆஃப்லைன் அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தியானத்தைப் பதிவிறக்க விரும்பினால், பிளேயரின் கீழ் வலதுபுறத்தில் உள்ள ‘பதிவிறக்கு’ (‘download’) ஐகானைக் கிளிக் செய்க. நீங்கள் எதிர்காலத்தில் அதே தியானத்திற்குத் திரும்பும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு பயன்படுத்தப்படும்.
மற்ற மொழிகளில் வழிகாட்டப்படும் தியானங்கள்
வழிநடத்தப்படும் தியானங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றை இயக்க, அத்துடன் செய்தி இடுகைகள் மற்றும் மொழி சார்ந்த ஆன்லைன் தியானம் குறித்த அட்டவணைகள் போன்ற அனைத்து பாடம் அல்லாத உள்ளடக்கத்தையும் அணுக, உங்கள் செயலியின் மொழியை முறையே இந்தி, தமிழ், தெலுங்கு-இல் அமைக்கவும்.
மேலும் உதவி தேவையா?
உங்கள் கேள்விக்கான பதிலை கண்டறிய முடியவில்லையா? உதவிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
எங்கள் சர்வதேச தன்னார்வ உதவி மையத்தின் மூலம் உதவி பெறுங்கள்:
செயலியின் ‘ஃபார் மி’ பிரிவில், தயவுசெய்து ‘உதவி’ என்பதைக் கிளிக் செய்யுங்கள். எங்கள் உதவி மையத்துடன் ஒரு குறிப்பை உருவாக்க கோரப்படும் தகவலை நிரப்புங்கள். சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் வழங்கினால், விரைவாகவும் திறமையாகவும் பதிலளிப்பது எங்களுக்கு எளிதாக இருக்கும்.
உதவி (support screen) திரையை அணுக உங்களால் செயலியைத் திறக்க முடியவில்லை எனில், சிக்கலை விரிவாக விவரித்து, உங்கள் சாதனம் பற்றிய தகவல் மற்றும் உங்கள் மாணவர் (பக்தர்) கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியுடன். apptechsupport@yogananda-srf.org க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
எங்கள் சமீபத்திய மேம்படுத்தலுக்கான பாராட்டு
இந்த அற்புத புதிய செயலியை உருவாக்கியதற்கு மிகவும் நன்றி. அதன் பல செயல்பாடுகள் குறித்து நான் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கிறேன். பாடங்களைப் படிப்பது, முக்கியமான விஷயங்களை முன்னிலைப்படுத்துவது மற்றும் ஃப்ளாஷ்கார்டுகளை உருவாக்குவது எவ்வளவு நன்றாக இருக்கிறது. மேலும் இந்தப் புதிய செயலியின் காரணமாக, எனது அன்றாட வாழ்விலும் இறைவனின் இருப்பை அதிகமாக இப்போது உணர்கிறேன். ஓய்வு நேரத்தின் ஒரு குறுகிய காலத்தில், நான் விரைவாக என் ஃப்ளாஷ்கார்டுகளை பார்த்து, என் வாழ்க்கையில் இன்றியமையாதது எது என்பதை அல்லது இந்த நேரத்தில் நான் எதில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்பதை நினைவில் கொள்ள முடியும். இந்த அருளாசிக் கொடையின் பொருட்டு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்!
நான் இன்று உங்களுக்கு இந்த மின்னஞ்சலை மிகுந்த மகிழ்ச்சியுடன் அனுப்புகிறேன். புதிய SRF செயலி இப்போது பார்வையற்றவர்களுக்கு எவ்வாறு அணுகத்தக்க வகையில் உள்ளது என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்பினேன். இது மிகவும் அற்புதமானது, இந்த கொடையின் பரிமாணத்தின் காரணமாக இன்னும் அதிகமாக நான் பூரிப்படைவதை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த சமீபத்திய முன்னேற்றங்கள் செயலியை ஒரு "ஆவண வாசிப்பளர்" ஐ விட "திரை வாசிப்பாளர்" தேவைப்படுபவர்கள் அணுகக்கூடியதாக ஆக்குகின்றன. இந்த செயலியின் மூலம் வழங்கப்படும் தியானங்கள் மற்றும் பிற SRF / YSS நிகழ்வுகளை பார்வையற்ற பக்தர்கள் எவ்வாறு அணுக முடியும் என்பதை இந்த செயலி மாற்றும். வழக்கம் போல, நமது குருதேவர் நாம் எப்போதும் கோர நினைத்ததைவிட மிக தாராளமாக நமக்கு எல்லையற்றதை வழங்கியுள்ளார். நம் SRF குடும்பம் நம் தேவைகளை அறிந்து பதிலளித்தது குறித்து நான் மிகவும் தாழ்மையுடன் இருக்கிறேன்.
நான் செயலி அறிவிப்பைப் பார்த்தேன், மேம்படுத்தல் ஒரு திடீர் திருப்புமுனை பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். பழைய செயலியிலிருந்து நான் கொண்டிருந்த அனைத்து விருப்பங்களும் இதில் செயலாக்கப்பட்டு உள்ளன —
‘லேண்ட்ஸ்கேப்’ பயன்முறை, படிப்பிற்காக தேடக்கூடிய முன்னிலை படுத்தும் அம்சம் (ஆனால் என் தீவிர ஆசைகளை காட்டிலும் சிறப்பாகவே உள்ளது), உரைக்கு குரல் வழி, மற்றும் அனைத்து இணைப்புகளும் வசதியாக அங்கேயே உள்ளன. நான் ஏற்கனவே மற்றவற்றை விட அதனுடன் அதிக வாசிப்பு நேரத்தை செலவிட்டேன். குறிப்பாக என் முன்னிலைப் படுத்தியவைகளை ஸ்க்ரோலிங் செய்து படித்தல், அதை இப்போது வண்ணத்தின் அடிப்படையில் வகைப்படுத்தலாம் மற்றும் வடிகட்டலாம். இது உறுதிமொழிகளின் எனது அனைத்து முன்னிலைப்படுத்தியவைகளையும் ஒரு வண்ணமாக அமைக்கவும், அவற்றை தடையில்லா பட்டியலாக பார்க்கவும் ஏதுவாக்குகிறது! இது ஒன்றே ஒரு புதையல்! பல ஆண்டுகளாக நான் எண்ணிக் கொண்டிருந்த செயலி மேம்படுத்தல்கள் அனைத்தையும் SRF மிகவும் ஈர்க்கக்கூடிய ஒற்றை பாய்ச்சலில் கொண்டு வந்துள்ளது என நினைத்துக்கொண்டேன். நன்றி!
கணினியில் எனது பாடங்களை இப்போது படிக்க முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கிடைக்கப் பெறும் அனைத்து அருளாசிகளுக்கும் என்னால் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு எல்லாமே மிகச் சிறப்பாக வழங்கப்பட்டுள்ளன!
எனவே நான் இப்போது பழக்கப்பட்ட SRF / YSS செயலியை திறக்கிறேன். எனக்கு ஒரு அறிவிப்பு வருகிறது: புதிய புதுப்பிப்பு கிடைக்கப் பெறும். நான் ஆப் ஸ்டோரில் உள்ள "புதியது என்ன" பகுதியைப் படிக்கத் தொடங்குகிறேன், மேலும் இந்த புதிய புதுப்பிப்பில் (பதிப்பு 3.0.0). பல புதிய அம்சங்கள் மனதை கவர்ந்தது!
இந்த செயலியின் புத்தம் புதிய பதிப்பை நான் மிகவும் விரும்புகிறேன், தியானம் பயிற்சி செய்வதற்கும், கற்பதற்கும் மற்றும் சக பக்தர்களுடன் இணைவதற்கும், SRF இலிருந்து சமீபத்திய செய்திகளைப் பெறுவதற்கும் அதிக அம்சங்கள் உள்ளன.
இந்த செயலியின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு முற்றிலும் அற்புதமானது. அனைத்து விஷயங்களையும் ஒரே பக்கத்தில் கொண்டு வருவது மிகவும் அருமை. மிகச் சிறப்பு.
புதுப்பிக்கப்பட்ட செயலியை நேசித்தல், குறிப்பாக TTS [உரை-க்கு-குரல் வழி]!
எஸ் ஆர் எஃப்/ ஒய் எஸ் எஸ் செயலியை அமைக்கவும்
கூகுள் பிளே அல்லது ஏப்பல் ஸ்டோர் இலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்யவும்:
ஒய் எஸ் எஸ் பாட மாணவர்கள் டெஸ்க்டாப் செயலியில் ஒய் எஸ் எஸ் பாடங்கள் மற்றும் துணை சாதனங்களை காணலாம்:

















